தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிமீது ஏன் சகதி வீசப்படுகின்றது!!

You are currently viewing தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிமீது ஏன் சகதி  வீசப்படுகின்றது!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிமீது தேசியம் பேசும் சில சக்திகள் சகதிகளை வீசிக்கொண்டிருப்பதை சில ஊடகங்கள் வயிலாக அறியமுடிகின்றது.

ஏன் இந்த சகதி வீசல் வீசப்படுகின்றது என்பதை தமிழ் ஊடகப்பரப்பில் நீண்டகாலமாக பணியாற்றுகின்றவர்கள் என்பதன் அடிப்படையில் அலசிப்பார்க்கவேண்டிய தேவை இருப்பதன் காரணமாக இதை எழுதத் தூண்டியுள்ளது.

சரிவிடயத்திற்கு வருவோம் 2009 ஆம் ஆண்டிற்கு முன்பு விடுதலைப்புலிகளின் வெளியுறவுக்கொள்கை அரசியலை முன்னெடுத்து வந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் மற்றும் செயலாளர் கயேந்திரன் ஆகியோர் 2009 இற்கு பின்பும் அதே கொள்கையில் உறுதியாக இருந்ததன் காரணமாக எமது இனத்தின் அழிவுக்கு மூலகாரணமாக இருந்த அண்டைநாடுகளால் ஓரங்கட்டுவதற்கு திட்டம் தீட்டியதன் விளைவு தமிழ்த்தேசியக்கூட்டமைக்குள் ஏற்பட்ட கொள்கை முரண்பாட்டால் திரு கயேந்திரகுமார், திரு கயேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் வெளியேறி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி ஒருநாடு இருதேசம் என்ற கோசத்தோடு தோற்றம் பெற்றது.

யாருக்கும் வளைந்து நெளிந்து போகாது எமக்காக அற்பணித்த புனிதர்களின் நினைவோடு மெல்ல மெல்ல எமைக்கொன்றவர்களை சர்வசே குற்றவாளி கூண்டில் ஏற்றவேண்டும் என்ற அசையாத சிந்தனையோடு சிறீலங்காவில் நடைபெற்றது தமிழின அழிப்பு என்ற கருத்தியலை கரைய விடாது ஜநாவிலும் தமிழ்த்தேசியப்பரப்பிலும் தொடர்ச்சியாக பரப்புரையை முன்னெடுத்து வந்தனர்.

ஆனாலும்  போரின் இழப்பாலும் வலிகளாலும் சோர்ந்துபோய் கனவுகளை தொலைத்துவிட்டோம் என்ற நலிந்துபோன மனநிலையில் வாழும் மக்களிடம் மீண்டும் விடுதலைச்சிந்தனையை விதைப்பதற்கு மலையோடு மோதும் நிலை இருந்ததை யாரும் மறக்க முடியாது, இதற்கு மேலும் சில வலுவான காரணங்கள் மக்களின் மனநிலைகளை சுற்றிவளைத்து நின்றது.

உதாரணமாக இளைஞர்களை போதை, வன்முறை,சமூகசீர்கேடுகள் என்ற கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிற்குள் சிக்கவைத்தமை, அபிவிருத்தி அரசியலுக்குள் மட்டும் கட்டிப்போட்டு வைத்தமை, இராணுவ  அச்சுறுத்தலால் மக்களின் சீரிய சிந்தனைகளை முடக்கியமை போன்றன  பிரதான விடயங்களாக அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்துசெல்ல முனைந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு முக்கியமான முட்டுக்கட்டைகளாகவும் இருந்து வந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் மூளையில் செயற்பட்டுவந்த தமிழ்த்தேசிய கட்சிகளின் எதிர்ச்செயற்பாடுகளும் பெரும் சவாலாக இருந்துவந்துள்ளது இன்றும் அதுதான் நடக்கின்றது.

இத்தனை இடையூறுகளுக்குள்ளாலும் நேர்மையான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து வந்த மக்கள் முன்னணி கடந்த ஆண்டு சிறீலங்காவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிகொள்வதற்கு மக்களின் புரிதலும் தொடர் ஏமாற்றங்களும் பெரும் பலமாக அமைந்தது.

கடந்த 11 ஆண்டுகள் போல் அல்லாது சிறீலங்கா பாராளுமன்றம் அதிர்கின்ற அளவிற்கு தமிழ் இனத்தின் உரிமைக்கான குரல் பலமாக ஒலித்துக்கெண்டிருப்பதை யாரும் மறுக்கமுடியாது, இதனால் மற்றய கட்சிகளின் பாரளுமன்ற உறுப்பினர்களும் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த்தேசிய அரசியலை பேசவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இப்போது பூகோள அரசியல் முற்றத்தில் தமிழ் அரசியலும் பூத்து குலுங்கும் மல்லிகைபோல் மணக்கத்தொடங்கிய நிலையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒன்றிணைவில்  மூன்று கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டு ஒரு வரபை ஜநாவிடம் கையளிக்கவுள்ளனர், இங்கே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஈழத்தமிழரின் விவகாரம் மாற்றப்படவேண்டும் மனிதவுரிமை சபையிலே கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள்.

இதைத்தான் இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.

ஆகவே முதற்கட்டமாக இந்த விடயத்தில் வெற்றி கிடைக்குமானல் எமது எல்லையை அடைந்தற்கான வினைததிறனை பெறலாம்.

ஆனால் இனத்தை அழித்தவர்களின் ஆலோசனையில் இயங்கும் சக்திகள் தங்களின் திட்டமிடலுக்குள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை வீழ்த்துவதற்காக மிகுந்த பிரேயத்தனங்களை மேற்கொண்டு வருவதன் அழுத்தமே ஊடகங்களில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு சேறு பூசும் செயற்பாடுகள் என்பதை ஊகிக்கமுடிகின்றது, அத்தோடு உண்மைத்தன்மையானது மிகவிரைவில் தன்முகத்தை காட்டும்போது இந்த பூச்சாண்டிகளெல்லாம் காணமல் போய்விடுவார்கள்.

இப்படியான செயற்பாடானது காலம் காலமாக எமது விடுதலைப்பயணத்தில் பழகிக்போனதொன்றுதான்.

இங்கே மிக முக்கியமான விடயமாக நாம் சீர்தூக்கி பார்க்கவேண்டியது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது கொள்கைரீதியாக இறுக்கமாக இருப்பதால் சில அதிகார சக்திகளுக்கு ஆதிக்கக்கால் வைப்பதில் முட்டுக்கட்டையாக இருக்கின்றது.எனவே இவர்களை சிதைத்து சின்னாபின்னமாக்கவேண்டுமென்பதில் கங்கணம் கட்டிநிக்கின்றார்கள் அதேவேளையில் மக்கள் வைத்திருக்கும் மதிப்பினை இழக்கசெய்து மதிப்பிழந்த கட்சிகளுக்கு மகுடம் சூட்டவும் முனைகின்றார்கள் இனவழிப்பாளர்கள்.

-தூயவன்-

பகிர்ந்துகொள்ள