தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது குற்றச்சாட்டு!

You are currently viewing தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள வைக்கும் வகையில் கருத்து கூறினார் என லலீசன் மீது குற்றச்சாட்டு!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் அதிபர் ச. லலீசனுக்கு எதிராக புலனாய்வு துறையினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெற்ற ” தமிழ் வேள்வி – 2023″ என்ற நிகழ்வில் , “ஈழ தமிழ் சமுதாயத்தில் தற்போது இளைஞர் அமைப்புக்களின் எழுச்சி , அவசியமானதா ? அவசியமற்றதா ?” எனும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராக லலீசன் கலந்து கொண்டிருந்தார்.

அதன் போது , தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ள தூண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாகவும் , இன நல்லிணக்கத்தை குழப்பும் வகையிலான கருத்துக்களை தெரிவித்ததாக கல்வி அமைச்சுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்வி அமைச்சின் ஒழுக்காற்று பிரிவுக்கான மேலதிக செயலர் , சீ. சமந்தி வீரசிங்க , கல்வி அமைச்சின் ஆசியர் பயிற்சி கல்வி பிரிவின் பணிப்பாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டு , நடவடிக்கை எடுக்குமாறும் , எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தனக்கு விளக்கமான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கல்வி அமைச்சுக்கு குறித்த முறைப்பாட்டை புலனாய்வு பிரிவினரே வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பட்டிமன்றில் கூறப்பட்ட கருத்தை முறைப்பாடாக வழங்கிய போது , அதனை ஏற்று விசாரணைகளை முன்னெடுப்பது , கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மோசமான செயற்பாடு என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments