தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- ஆர்எஸ்எவ் கண்டனம்!

You are currently viewing தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்- ஆர்எஸ்எவ் கண்டனம்!

தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கண்டித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆபத்தான விதத்தில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சட்டவிரோத துஸ்பிரயோக நடவடிக்கைகளை பயன்படுத்துவதை கைவிடுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்களிற்கு எதிரான சமீபத்தைய நீதித்துறை துன்புறுத்தலில் இரண்டு பத்திரிகையாளர்கள் பயங்கரவாத சந்தேகத்தின் கீழ் அடுத்த சில தினங்களில் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர் என எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்துள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பின் ஆசிய பசுபிக் பிரிவு பத்திரிகை சுதந்திரத்தின் மீதான பெரும் அச்சுறுத்தலாக இது காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களிற்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கவேண்டும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழர் விவகாரங்கள் குறித்து செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை வேட்டையாடுவதை பாதுகாப்பு படையினர் கைவிட வேண்டும் எனவும் எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பத்திரிகையாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதற்கான சமீபத்தைய உதாரணமாக மட்டக்களப்பின் பாலசிங்கம் கிருஸ்ணகுமார் செல்வகுமார் நிலாந்தன் ஆகிய இருவரையும் 14 ம் திகதி விசாரணைக்காக சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இருவரும் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்தமை தொடர்பிலான விசாரணைகளிற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் மட்டக்களப்பில் ஊடக சுதந்திர பாதுகாப்பிற்காக தீவிரமாக செயற்படுபவர்கள் பௌத்த சிங்களத்தின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படும் நாட்டில் தமிழ் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் . 1983முதல் 2009 வரை காணப்பட்ட இரு சமூகங்களிற்கு இடையிலான மோதலை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இருவரும் முயல்கின்றனர் என அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ் கார்டியனிற்காக பணிபுரியும் நிலாந்தன் நீதித்துறை அழைப்பாணைகளை தொடர்ச்சியாக பெற்றுவரும் பத்திரிகையாளர் கடந்த காலங்களிலும் பலமுறை சிஐடியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பெப்ரவரியில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நாடாளவிய ரீதியில் இடம்பெற்றவேளை அது குறித்த செய்தி சேகரிப்பிற்காக அவர் இறுதியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சமூக ஊடகங்களை பயன்படுத்தி பயங்கரவாதத்தை தூண்டுகின்றார் விடுதலைப் புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முயல்கின்றார் என அவர் குற்றம்சாட்டப்பட்டார்.ஜூலை 2021 இல் மட்டக்களப்பில் அவரை மூன்று மணித்தியாலங்கள் பொலிஸார் விசாரணை செய்தனர். அவர் சமூக ஊடக விபரங்களை மாத்திரமல்லாமல் வங்கி கணக்கு விபரங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.

அவருடைய வெளிப்படையான செய்தியறிக்கையிடல் பாணியும் அவர் தெரிவு செய்யும் விடயங்களும் தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கு பிடித்தமான விடயங்கள் இல்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments