தமிழ் பெண்ணை கொலை செய்த சிங்கள பேரினவாத இராணுவத்தினருக்கு விடுதலை!

You are currently viewing தமிழ் பெண்ணை கொலை செய்த சிங்கள பேரினவாத இராணுவத்தினருக்கு விடுதலை!

யாழ்ப்பாணத்தில் கூட்டு பலாத்காரத்தின் பின் கொலை செய்யப்பட்ட ரஜினி வேலாயுதம்பிள்ளை என்ற 24 வயது இளம் பெண் தொடர்பான வழக்கின் குற்றவாளிகளான சிங்கள இராணுவத்தினரை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு இருக்கின்றது

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர்  30 ஆம் திகதி கோண்டாவில் இராணுவ சாவடியில் இந்த பெண்ணை கடத்திய இராணுவத்தினர் கோரமான பலாத்காரத்தின் பின் வீடொன்றின்   மலக்குழிக்குள் கொன்று வீசி இருந்தனர்

வெளிநாடு செல்வதற்கு முதல் நாள் மானிப்பாயிலிருந்த  சிறிய தாயாரிடம் பிரியாவிடை பெறுவதற்காக சென்று கொண்டு இருந்த  போத ரஜினி கடத்தப்பட்டு இருந்தார்

மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவின் கட்டுப்பாட்டிலிருந்த போது நடந்த மேற்படிசம்பவம் தொடர்பாக பல்வேறு மட்டங்களில் எழுந்த கடுமையான அழுத்தங்களையடுத்து 6 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்

ஆனால் கைது செய்யப்பட்டிருந்த இராணுவத்தினருக்கு பாதுகாப்பில்லை என வழக்கை கொழும்புக்கு மாற்றி இருந்தார்கள்

பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் 2001ஆம் ஆண்டு சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு  ஜூரியின் உடன்பாட்டின் மூலம் மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை  வழங்கப்பட்டிருந்தது

நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் நீதிமன்றத்தில்   மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை குற்றமற்றற்றவர்கள் என விடுதலை செய்து இருக்கின்றார்கள்

மற்றைய இராணுவ அதிகாரிக்கு எதிராக மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கின்றார்கள். எனவே அவரும் விரைவில் விடுதலை செய்ய பட போகின்றார்

கோட்டாபய  ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது மிருசுவில் கொலை வழக்க்கில் தண்டிக்கப்பட்ட மரண தண்டனை குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கி இருந்தார்,

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments