தியாகி திலீபன் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மூதூரில் போராட்டம்!

You are currently viewing தியாகி திலீபன் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மூதூரில் போராட்டம்!

திருகோணமலை கப்பல்த்துறையில் வைத்து  தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனி மீதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் உள்ளிட்ட ஊர்திப் பவனியுடன் பயனித்தோர் மீதும் சிங்கள இனவாதக் குண்டர்களால் நடாத்தப் பட்ட கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்து திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் மாபெரும் கண்டன எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.

தாயக மற்றும் புலம் பெயர்ந்தோர் நினைவேந்தல்க் குழுவின்  ஏற்பாட்டில் நேற்று ( 20.09.2023) புதன் கிழமை முற்பகல் நடைபெற்றுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மூதூர்ப் பிரதேசம் உட்பட திருகோணமலையைச்சேர்ந்த தமிழ் மக்கள்  கலந்து கொண்டு கண்டனப் பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தியாகி திலீபன் அவர்களின் 36,வது ஆண்டு நினைவு நாட்களை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தமிழர் தாயகம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப் பட்டுக் கொண்டிருக்கும் “திலீபன் வழியில் வருகின்றோம்” என்ற வாசகத்துடனும் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தைக் கடத்தும் வகையிலும் முன்னெடுக்கப் பட்டுக்கொண்டிருக்கும் ஊர்திப் பவனியானது

கடந்த 15,ம் திகதி அதாவது தியாகி திலீபன் அவர்கள் உண்ணா நோன்பை ஆரம்பித்த நாளில்
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் காலை நேரம் -10.30,மணிக்கு ஆரம்பிக்கப் பட்டு

அம்பாறை,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பயணித்து மூன்றாவது நாளான 17,ம் திகதி, திருகோணமலை கப்பல்த் துறைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சிங்கள இனவாதக் குண்டர்களால் வழிமறிக்கப் பட்டு தாக்குதல் நடாத்தி ஊர்திக்குப் பாரிய சேதங்கள் ஏற்படுத்தப் பட்டதுடன் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்ட அலங்கார வடிவத்தின் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடாத்திச் சேதமாக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அந்த ஊர்தியில் பயணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் அவர்களும்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன்,மற்றும்

ஊர்தியுடன் பயணித்த 12,பேர் மீது சிங்களக் குண்டர்களால் கொலை வெறித் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தியாகி திலீபன் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மூதூரில் போராட்டம்! 1

தியாகி திலீபன் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மூதூரில் போராட்டம்! 2

தியாகி திலீபன் நினைவு ஊர்தி தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மூதூரில் போராட்டம்! 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments