அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது!

You are currently viewing அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது!

சிங்கள இனவாதிகளின் தடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திருகோணமலையில் இன்று ( 20.09.2023) புதன்கிழமை தியாகி திலீபன் அவர்களின் 36, வது ஆண்டு நினைவு நாட்களின் 6, வது நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளன.

திருகோணமலை சிவன்கோவில் முன்பாக மாவட்ட தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன், மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன், ஆகியோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை தாயகப் பகுதிகள் தோறும் தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய திலீபன் வழியில் வருகின்றோம் என்ற ஊர்தி பவனி

கடந்த 17ம்,திகதி திருகோணமலையில் கப்பல்த்துறை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது கப்பல்த்துறைப் படைமுகாம் பகுதியில் வைத்து சிங்கள இனவாதக் குண்டர்களால் வழி மறிக்கப்பட்டு ஊர்தி மீதும் தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் வைக்கப்பட்ட அலங்கார வடிவத்தின் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடாத்தி சேதமாக்கப்பட்டதுடன்

ஊர்தியில் பயணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன் மற்றும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர்-காண்டீபன்,ஆகியோர் உட்பட்ட சிலர் மீதும் சிங்கள இனவாதக் குண்டர்களால் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை தெரிந்ததே.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது! 1

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது! 2

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது! 3

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் திருகோணமலையில் தியாகி திலீபன் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது! 4

 

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments