தென்னிலங்கையிலிருந்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட பிக்குகள்!

You are currently viewing தென்னிலங்கையிலிருந்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட பிக்குகள்!

பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும், தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் குருந்தூர்மலைக்கு இன்று அணி திரண்டு வருமாறு அழைப்புகள் விடுக்கப்பட்ட நிலையில்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் குருந்தூர் பொங்கலுக்காக புறப்பட்டு செல்வதாக அறிவித்துள்ளனர்

கடந்த சில காலங்களாக முரண்பாடுகள் காரணமாக பொங்கல் நிகழ்வை குழப்பியிருந்தார்கள். இருப்பினும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலே ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வினை எவ்வித இடையூறும் இல்லாது நடாத்துவதற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.

இந்த தீர்ப்பின் அடிப்படையிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் இருப்பையும் தொன்மையையும் பாரம்பரிய வழிபாட்டு முறையான பொங்கல் நிகழ்வினை நடாத்துவதற்கு ஆலய பரிபாலனசபையினர் தீர்மானித்திருக்கின்றனர்.

“வரலாற்று சிறப்பு மிக்க வன்னி பெருநிலபரப்பிலே தொன்மை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வு  பிரமாண்டமான முறையிலே இடம்பெறவுள்ள நிலையில்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தென்னிலங்கையிலிருந்து பொலிஸ், இராணுவ பாதுகாப்புடன் பெருமளவு பிக்குகள் சிங்களவர்கள் பேருந்துகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

எனவே, தாயக பிரதேசத்திலே வாழுகின்ற அனைத்து தமிழ் உறவுகளும் அதாவது வன்னி பெருநிலப்பரப்புக்கு அப்பால் வடக்கு, கிழக்கிற்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பொங்கல் நிகழ்வினை சிறப்பிக்கவும் தமிழ் மக்களின் இருப்பினை நிலைநாட்டவும் அனைவரையும் வருகைதருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்னிலங்கையிலிருந்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட பிக்குகள்! 1

 

தென்னிலங்கையிலிருந்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட பிக்குகள்! 2

தென்னிலங்கையிலிருந்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட பிக்குகள்!

இன்று பொங்கல் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் தென்னிலங்கையிலிருந்து பேரூந்துகளில் சிங்களவர்கள் மற்றும் பிக்குகள் குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

 

தென்னிலங்கையிலிருந்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட பிக்குகள்! 3

தென்னிலங்கையிலிருந்து குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்ட பிக்குகள்! 4

இதேவேளை குருந்தூர் மலை நோக்கி செல்லும் தமிழ் மக்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

மேலும் குருந்தூர் மலைக்கு இரவோடு இரவாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துகள், உழவு இயந்திரங்கள் சகிதம் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குருந்தூர் மலையில் அதிகளவான பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments