பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் உயிரிழப்பு !துணைவேந்தர் மீதும் தாக்குதல்!

You are currently viewing பல்கலைக்கழகத்தில் பெரும் பதட்டம்! இரு மாணவர்கள் உயிரிழப்பு !துணைவேந்தர் மீதும் தாக்குதல்!

வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள நீர்நிலையில் இரு மாணவர்கள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவத்தால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று (17) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த நிலையில், அவர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருகையில், வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் வலயமட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் மைதானத்திற்கு அருகாமையில் உள்ள பாரிய நீர் நிரம்பிய கிடங்கில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளனர்.

இதனை அவதானித்த ஏனைய மாணவர்கள் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர்.

இதன்போது குறித்த பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும், பொதுமக்கள் ஆகியோர் மூழ்கியவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக இராணுவத்தினர் மற்றும் வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினரும் அங்கு வருகை தந்திருந்தனர்.

ஒரு மணிநேரத்தின் பின்னர் நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் ஏற்கனவே அவர்கள் மரணித்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் வவுனியா பட்டானிச்சூர் முஸ்லிம் மகா வித்தியாத்தில் கல்விகற்கும் 15மற்றும் 16வயதை உடைய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இதனை அவதானித்த குழுவொன்று அவர் மீது தாக்குதலை முன்னெடுத்தது. இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு வருகைதந்த விசேட அதிரடிப்படையினர் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், காவல்துறையினரின் பாதுகாப்புடன் துணைவேந்தர் பாதுகாப்பாக அழைத்துச்செல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் சிறீலங்கா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments