நல்லிணக்கச் செயல்பாட்டில் அதிகாரப் பகிர்வு முக்கியம்!இந்தியா

You are currently viewing நல்லிணக்கச் செயல்பாட்டில் அதிகாரப் பகிர்வு முக்கியம்!இந்தியா

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.

புது டில்லியில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையுடன் துணை நிற்கும் என்றும் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையின் மூலம் கையாளவும், சர்வதேச கடல் எல்லைக் கோடு சம்பவங்களைக் கையாள்வதில் வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் இரு தரப்பினரும் நீண்டகால ஒருமித்த கருத்தை மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது”அதிகாரப் பகிர்வு” என்பது தமிழர்களின் நல்லிணக்கச் செயல்பாட்டின் முக்கிய அம்சம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments