நல்லிணக்க நாடகத்தை தடுத்து நிறுத்திய உணர்வாளர்!

You are currently viewing நல்லிணக்க நாடகத்தை தடுத்து நிறுத்திய உணர்வாளர்!

உணவு தவிர்ப்பை மேற்கொண்டு உயிர் நீத்த தியாகி திலீபனுக்கு, அஞ்சலி செலுத்த சென்ற, கடற்றொழில் அமைச்சரை, உணர்வாளர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள், யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள, திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.

இதன்போது, அங்கிருந்த உணர்வாளர்கள், அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்து, தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நல்லிணக்க நாடகத்தை தடுத்து நிறுத்திய உணர்வாளர்! 1

 

சமாதான உடன்படிக்கைக்காக எதிர்த்து நின்ற சந்திரசேகரன் தமிழின அழிப்பிற்கு உடந்தையாக இருந்த சந்திரசேகரன் புனிதமான தியாகத்தை மேற்கொண்ட வீரனின் கோவிலுக்கு வருவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை மாறாக இவர்களின் நல்லிணக்க நாடகத்திற்குத்தான் வலுச்சேர்க்கும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply