நோர்வேயில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்புப்போராட்டம்!

You are currently viewing நோர்வேயில் நடைபெற்ற கரிநாள் கவனயீர்ப்புப்போராட்டம்!

பிரித்தானிய பேரரசிடமிருந்து சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்து. அன்று முதல் இன்றுவரை எமது தாயகமான தமிழீழ தேசம், சிங்களப் பேரினவாதத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அன்று மறுக்கப்பட்ட
நீதி, இன்று வரை மிகப்பெரிய இனஅழிப்பை தமிழினம் சந்தித்து நிற்கிறது. பிரித்தானியா உட்பட உலகின் பல நாடுகளில் தமிழர்கள் ஏதிலிகளாக வாழும் நிலையை உருவாக்கியது. பிறப்பால் சுயநிர்ணய உரிமையை கொண்டுள்ள தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சி அதிகாரம் இன்றி நாடற்றவர்களாக
வாழ்கிறோம். ஏனெனில் எமது மண் சிறிலங்கா பேரினவாத தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
எனவே எமது வலிகளையும் நியாயப்பாடுகளையும், இன்றும் தாயகத்தில் எம்மவர்கள் குரல்வளை நசுக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதையும் அனைத்துலக மக்களிற்கும் தெரியப்படுத்தும் முகமாக நோர்வே நாடாளுமன்றம் முன்பாகவும் கரிநாள் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments