தமிழ் முரசம் வானொலியின் மனிதாபிமான பணி ஊடாக,நோர்வே வாழ் இளையோரின் பங்களிப்பில், இப்பேரிடர் காலத்தில் பாதிக்கப்படட பண்டி விரிச்சான் கிராமத்தின் 97 மாணவர்களுக்கு,கற்றல் உபகரணங்களை( எழுத்தேடு 6, கொம்பாஸ் 1, சித்திரம் வரைதல் ஏடு, 1 கலர் பெட்டி) வழங்கியதோடு மட்டுமில்லாமல்,தமிழ் மொழி சார்ந்த விழிப்புணர்வு மற்றும் நல் மகிழ்வான தருணங்களை(சிற்றுண்டி,விளையாட்டு ,வினாவிடை போட்டியும் பரிசு வழங்குதலும்) உருவாக்கிய , உங்கள்அனைவருக்கும் பண்டி விரிச்சான் பாட சாலை சார்பாகவும் கிராம மக்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து நிற்கும் எங்கள் பாடசாலைப்பிள்ளைகளிற்கு நம்பிக்கையை ஊட்டுவதற்கான உளவள ஊக்கப்படுத்தலும் கல்வியை இடைவிடாது கற்பதற்கான உந்துதலும் இந்த முன்னெடுப்பிற்கான முயற்சியின் நோக்கமாக அமைந்தது.






