யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
மடுமாதா ஆலய யாத்திரைக்காக புறப்படும் வேளையில் பட்டாசுகள் கொளுத்தப்பட்ட நிலையில், அவற்றில் ஒரு பட்டாசு வெடிக்காமல் இருந்த நிலையில், அதனை மீண்டும் வெடிக்க செய்வதற்கு குறித்த இளைஞர் முற்பட்டுள்ளார்.
இதன்போது அந்த பட்டாசு திடீரென வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






