பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பலி; 150 பேர் காயம்!

You are currently viewing பாகிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பலி; 150 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், குறைந்தது 150 பேர் காயமடைந்த நிலையில் மேலும் நூற்றுக்கணக்கானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் மற்றும் இடிபாடுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அணர்த்த முகாமைத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தை அடுத்து குவெட்டா நகரில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின், ஹார்னாய் பகுதியை மையமாக கொண்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகளில் 5.7 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தால், கட்டடங்கள் இடிந்து விழுந்து அதில் சிக்கில் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.

இறந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என உள்ளூர் மருத்துவமனை தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

100 க்கும் மேற்பட்ட மண் வீடுகள் இடிந்து விழுந்தன மற்றும் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என பாகிஸ்தான் அரச அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.

ஹர்னாய் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாகாண தலைநகர் குவெட்டாவின் கிழக்கே அமைந்துள்ள ஹர்னாய், அதிக அளவில் நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர மீட்புப் படையணி மற்றும் தேவையான உடனடி உதவிகள் அனுப்பப்பட்டுள்ளதாக பலுசிஸ்தானின் உள்துறை அமைச்சர் மிர் சியாவுல்லா லாங்கு தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments