பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் விபத்தில் படுகாயம்!

You are currently viewing பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் விபத்தில் படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பயணித்த வாகனம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாராளுமன்ற உறுப்பினர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை ஆலையடிவேம்பில் நேற்று இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு சம்பவ தினமான இன்று காலை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு விட்டு மட்டக்களப்பை நோக்கி பிற்பகல் 4.00 மணியளவில் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அருகில் கார் ஒன்று பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்துடன் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினரது கை தோள்பட்டையை விட்டு விலகி படுகாயமடைந்த நிலையில் அம்புலன்ஸ் வண்டியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்றுவருகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply