பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ரஷ்ய ஹேக்கர்கள்!

You are currently viewing பிரித்தானியாவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ரஷ்ய ஹேக்கர்கள்!

ரஷ்யாவின் சைபர் கிரைம் கும்பலை சேர்ந்த ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்ட நிலையில். பிரித்தானிய மருத்துவமனைகளில் உள்ள வென்டிலேட்டர்கள் முடக்கப்படும் என ஹேக்கர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆதரவாளரும் லண்டனை சேர்ந்தவருமான 23 வயது Ioan Feher என்ற இளைஞர் திங்களன்று கைது செய்யப்பட்டார். ருமேனியாவில் அரசு இணையதளங்களை முடக்கிய உயர் தொழில்நுட்ப தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் Ioan Feher கைதாகியுள்ளார்.

இந்த நிலையில், ஆபத்தான ரஷ்ய ஹேக்கர்கள் குழு ஒன்று குறித்த இளைஞரை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளதுடன், மறுப்பு தெரிவித்தால் பிரித்தானியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உயிர் காக்கும் வென்டிலேட்டர்களை முடக்கி ஆயிரக்கணக்கன நோயாளிகளின் உயிருக்கு உலைவைப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை ஆதரித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் Ioan Feher. இந்த நிலையில் ருமேனியாவின் தேசிய குற்றவியல் செயலாண்மை அதிகாரிகள் மற்றும் பொலிசார் லண்டன் அதிகாரிகளை தொடர்பு கொண்டு விளக்கியதுடன், நேரிடிடையாக வடக்கு லண்டனில் உள்ள குறித்த இளைஞரின் குடியிருப்புக்கே சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ருமேனியாவின் அரசு இணைய பக்கங்களில் தாக்குதல் முன்னெடுத்த ரஷ்ய ஹேக்கர்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் அடிப்படையில் Ioan Feher கைது செய்யப்பட்டார்.

முன்னதாக ருமேனியாவின் அதிகாரப்பூர்வ அரசாங்க வலைப்பக்கம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய பக்கங்களை முடக்கியதாக ரஷ்யாவின் Killnet ஹேக்கர்கள் குழு பொறுப்பேற்றுக்கொண்டது.

மட்டுமின்றி, அரசியல் கட்சிகள், கலாச்சார அமைப்புகள் மற்றும் நிறுவனங்களும் குறித்த தாக்குதலில் இலக்காகின. தொடர்புடைய தாக்குதலில் Ioan Feher-கு தொடர்பில்லை எனவும், ஆனால் அவர் 48 மணி நேரத்தில் விடுவிக்கப்படவில்லை எனில் பிரித்தானிய மருத்துவமனைகளில் மொத்த வென்டிலேட்டர்களும் முடக்கப்படும் என Killnet ஹேக்கர்கள் குழு தலைவன் மிரட்டல் விடுத்துள்ளான்.

இதனிடையே, பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனை கட்டமைப்பானது தாக்குதலுக்கு இலக்காகக் கூடியது தான் எனவும் ஆனால் விழிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஹேக்கர்கள் அச்சுறுத்தல் வெளியிட்டபோதே Ioan Feher விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது, ஆனால் இந்த வழக்கானது தொடரப்பட்டால் Killnet ஹேக்கர்கள் குழு தாக்குதலை நடத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments