பொதுஜன பெரமுனவின் தேவைகளை தற்போது ரணில் நிறைவேற்றுகிறார்!

You are currently viewing பொதுஜன பெரமுனவின் தேவைகளை தற்போது ரணில் நிறைவேற்றுகிறார்!

மக்களால் முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வன்முறைகளில் ஈடுபட்ட சில குழுக்கள் செய்த நாசகார செயல்களை போராட்டகாரர்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் தேவைகளை தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக நாடாளுமன்ற  முன்னாள் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

20 ஆம் திகதி சனிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,

தற்போது பொதுஜன பெரமுனவின் தேவைகளையே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் அவர்கள் கோபத்திலுள்ளனர்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்கள் ஏதாவது ஒரு நெருக்கடிகளை உருவாக்கி, அவற்றை தமக்கேற்ற விதத்தில் பிரசாரம் செய்து அதனைக் கொண்டு அரசியல் இலாபமீட்டுகின்றனர்.

அதற்கமைய வீடுகள் தீ வைக்கப்பட்டமை உள்ளிட்ட நாசகார செயல்களை மேற்கொண்ட அனைத்து குற்றங்களையும் அமைதியான போராட்டகாரர்கள் மீது திணிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கேள்விகளிலிருந்து அதனை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டங்களை மேற்கொண்ட இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்க வேண்டாம். தற்போதுள்ளவர்கள் சரியான தலைவர்கள் என்றால் இந்நேரத்தில் இளைஞர் யுவதிகளின் எழுச்சி தொடர்பில் மகிழ்ச்சி அடைய வேண்டும். மாறாகக் கோபமடைக் கூடாது. எவ்வாறிருப்பினும் போராட்டங்கள் இன்னும் முடியவில்லை என்றார். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments