மட்டு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!

You are currently viewing மட்டு சீயோன் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!

உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பபட்டவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 9 மணிக்கு மட்டக்களப்பு சீயோன் தேவாலத்தின் முன்னால் தனித்தனியாக சென்று ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த வருடம் ஏப்பில் 21 ம்திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிறுவர்கள் 14 பேர் உட்பட 31 பேர் கொல்லப்பட்டதுடன் 85 பேருக்கு மேல் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் குறித்த தேவாலய கட்டிட நிர்மானப்பணிகளை அரசாங்கம் இராணுவத்தினர் ஊடாக செய்து வந்தது இருந்தபோதும் கடந்த டிசம்பர் மாதம் குறித்த கட்டிட நிர்மானப் பணிகளை இராணுவம் இடைநிறுத்தி அங்கிருந்து வெளியேறினர்

இதனால் குறித்த தேவாலய கட்டிடப்பணிகள் பூர்தி செய்யப்படாமல் மூடப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று தேவாலயத்தின் முன்னால் உயிரிழந்தவர்களின் நினைவு தின அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் கொரோனா நோய் தொற்று காரணமாக மக்கள் ஒன்று கூடக்கூடாது எனவும் வீடுகளில் அஞ்சலியை செலுத்துமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது

இந்த நிலையில் குறித் தேவாலயத்தில் மக்கள் ஓன்று கூடமுடியாதவாறு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதுடன் தேவாலய முன்பகுதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தனித்தனியாக சென்று ஈகைச்சுடர் ஏற்றி மலர் வழையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பகிர்ந்துகொள்ள