மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது!

You are currently viewing மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது!

தமிழ் முரசத்தின் 27வது ஆண்டு பொன்மாலைப்பொழுது நிகழ்வு மண்டபம் நிறைந்த மக்களோடு மிகச்சிறப்பாக நடைபெற்றது வரவேற்போடு ஆரம்பமாகி  மங்கலவிளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நோர்வே  இணைப்பாளர் இராகுல் விவேகானந்தன், தமிழ்முரசம் பணிப்பாளர் மனோ நாகலிங்கம்,  கலைபண்பாட்டு கழக இசைப்பொறுப்பாளர் கணேஸ் இராயேந்திரம், சிறப்பு விருந்தினர்களான மரியா லடிஸ்லொஸ், நாகேந்திரம் செல்லையா ஆகியோரால்  ஏற்றப்பட்டது.

அகவணக்கம், மாவீரர்கள் பாடல்கள், சிறப்புபேச்சுகள், திரையிசைப்பாடல் போட்டிகள், பண்டாரவன்னியன் நாடகம், இளையோர்களின் தமிழோடு விளையாடு, நர்த்தன காவிய மாணவிகளின் நடனங்கள் இவற்றோடு  திருமிகு கணேஸ் மற்றும் திருமிகு மரியா லடிஸ்லொஸ்  ஆகியோருக்கு தமிழ்முரசத்தால் தமிழீழ கலைஞர் விருது  வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வின் மகுடமான திரையிசைப்பாடல் போட்டியில் இளங்செல்லக்குயில் பிரிவில் சாகித்தியன் சிறீதரன் செல்லக்குயில் பிரிவில் பூமிகா கவீந்திரன்  வானம்பாடிகள் பிரிவில் யாமினா மதுரசீலன் ஆகியோர் வெற்றிக்கிண்ணத்தினை தட்டிச்சென்றனர் அதேவேளை மூன்று பிரிவுகளிலும் பாடிய போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சளைக்காது கடுமையான போட்டிகளை கொடுத்து பார்வையாளர்களை பரவசப் படுத்தியிருந்தனர், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழீழ கலைபண்பாட்டுக்கழக இசைக் கலைஞர்களின் சிறப்பான  இசையால் திரையிசைப்பாடல் போட்டிகள் காதுகளுக்கு நல்ல விருந்தாக அமைந்திருந்தது.

மிகவும் சிரமத்தின் மத்தியில் வெற்றியாளர்களை தெரிவுசெய்த நடுவர்களான  சுஜாதா, றமேஸ் மற்றும் அகர்சன் ஆகியோருக்கு எமது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த இசை நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு பிள்ளைகளை ஊக்கிவித்து தமிழ்முரசம் வனொலிக்கு தமது உதவிகளையும் தந்த பெற்றோர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதேபோன்று தமிழ்முரசத்தின் பணியாளர் சனுவின் நெறியாள்கையில் பண்டாரவன்னியன் நாடகம் நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கலைஞர்களின் பிரமிப்பான நடிப்பில் பார்வையாளர்களின் கண்களை கட்டிப்போட்டிருந்தது ஒரு பிரமாண்டமான படைப்பாக மக்களின் மனங்களை வென்றது.

இந்நிகழ்வு சிறப்பாக அமைய தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களின் சிறப்பான பணியை வழங்கிருந்தனர் குறிப்பாக ஒலிமைப்பில் உசாந், சிறி ஒளியமைப்பில் எழில் ஒளித்தொகுப்பில் பிரயிந் மற்றும் நேரலை காணொளி ப்பதிவு செய்த தமிழ்த்தேசியத்தொலைக்காட்சி(TTN) மற்றும் குணாளன் படப்பிடிப்பு செய்த ரெட் லைன்(Red line) நிறுவனத்தினர் ஆகியோருக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இவர்களோடு அரையிறுதிப்போட்டிக்கு மண்டபத்தை தந்துதவிய  Angel’s Paradise நிறுவனத்திற்கும் பயிற்சிகளுக்காக மண்டபங்களை தந்துதவிய தமிழர்வள ஆலோசனை மைய நிறுவனத்திற்கும்  utsikten selskapslokale நிறுவனத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு தமிழ்த்தேசிய வானொலியின் பொன்மாலைப்பொழுது நிகழ்வு மண்டபம் நிரம்பி வழிய ஆதரவு தந்த உறவுகளுக்கும் எல்லாகையிலும் ஒத்தாசை வழங்கிய தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குறிப்பு: இறுதிப்போட்டியில் பங்கெடுத்த அனைவரின் பாடல்களையும் மிக விரைவில் பதிவேற்றம் செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் கீழே உள்ள இணைப்பில் அழுத்தி பார்க்கலாம்.

https://www.youtube.com/channel/UCDM5pTRqTFXd-4wQpgnNZwg

 

5 4 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments