முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் சைவமக்கள் வழிபாட்டுப் பொங்கல்.

You are currently viewing முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் சைவமக்கள்  வழிபாட்டுப் பொங்கல்.

குருந்தூர் மலையில் இன்று (18.08.2024) வெள்ளிக்கிழமை
இடம்பெறும் பூ ஜையுடன் கூடிய பொங்கல் நிகழ்வை தடுக்கக் கூடாது என்று குருந்தூர்மலை பிக்குவுக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொங்கல் வழிபாட்டைத் தடுக்க வண கல்கமுவ சாந்தபோதிதேரருக்கோ, அருண்சித்தார்த்துக்கோ எந்தவித அதிகாரங்களும் இல்லை என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் நேற்று (17.08.3023)வியாழக்கிழமை கட்டளையிட்டு தீர்ப்பளித்துள்ளது.

முல்லைத்தீவு சிறீலங்கா காவல்துறையினர் நேற்று முன்தினம்
நீதிமன்றில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து பொங்கல் வழிபாட்டுக் எதிராக தடை உத்தரவைக் கோரியிருந்தனர் இந்நிலையில் இது விடயம் தொடர்பில் நேற்று
ஆராய்ந்த நீதிமன்றம் மேற்படி தீர்ப்பளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே  குருந்தூர் மலை ஆதி சிவனுக்கு சைவமக்களால் பொங்கல் வழிபாட்டை நடாத்த நீதிமன்றம் அனுமதி அழித்திருந்ததும் அதனைத் தடுக்கும் நோக்கோடு சிங்கள பௌத்த கடும்போக்குவாத துறவிகளாலும்,இனவாதிகளாலும் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கும் செயற்பாடுகள் மும்மரமாக மேற்கொள்ளப்பட்டு ஓர் அச்சுறுத்தலான நிலமை தோற்றுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றமையும்,

பொங்கல் நிகழ்வைக் தடுக்க சிங்கள மக்களை குருந்தூர் மலையும் அணிதிரளுமாறும் மணலாறு சிங்களகுடியேற்றத்திற்குள்ளான வெலியோயாவில் பரவலாக சுவர் ஒட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதோடு,குருத்தி விகாரை என்ற முகநூலில் பாரிய எதிர்ப்பு இனவாத தூண்டுதல்கள் நிறைந்த வன்முறையைத் தூண்டும் பல கருத்துக்கள் பதிவிடப்பட்டும் உள்ளன.

இவ்வாறான நிலையிலும் இன்று குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் பூஜை வழிபாடுகள் திட்டமிட்டபடி  பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற பல்வேறு தமிழ்த் தரப்புக்களாலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் சைவமக்கள் வழிபாட்டுப் பொங்கல். 1

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் சைவமக்கள் வழிபாட்டுப் பொங்கல். 2

முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலையில் சைவமக்கள் வழிபாட்டுப் பொங்கல். 3

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments