முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ரவிகரனிடம் விசாரணை!

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – ரவிகரனிடம் விசாரணை!

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடமும், கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவர் இ.மயூரனிடமும் முல்லைத்தீவு சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மே- 18 நினைவேந்தலின்போது விடுதலைப்புலிகளின் சின்னங்கள் எவையும் பயன்படுத்தக்கூடாது என சிறீலங்கா காவல்த்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை மேற்கொள்வதற்கு பிரதமர் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதேபோல் தாமும் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எவ்வித இடயூறுகளையும் மேற்கொள்ளமாட்டோம் என்றும் காவல்த்துறை பொறுப்பதிகாரியும் தெரிவித்திருந்ததாக இவர்கள் விசாரணையின் பின்னர் குறிப்பிட்டனர்.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை எவ்வித அசம்பாவிதங்களுமின்றி நடத்தி முடிக்கவேண்டும் எனவும் காவல்த்துறை பொறுப்பதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

அதிலும் குறிப்பாக இந்த நினைவேந்தல் நிகழ்விலே விடுதலைப்புலிகளின் சின்னங்கள் பயன்படுத்தப்படாமல் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments