யேர்மனியிலிருந்து 24 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர் உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு!!

You are currently viewing யேர்மனியிலிருந்து 24 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர் உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு!!

நேற்று 30.3.2021 செவ்வாய்க்கிழமை யேர்மனி டுசில்டோர்ப் விமானநிலையத்தில்லிருந்து 24 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

.யேர்மனியில் இருந்து அரசியற்தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவதற்காக கைதுசெய்து சிறைகளில் வைக்கப்பட்டிருந்தனர்.

அதனை எதிர்த்து யேர்மனி ஈழத்தமிழர் மக்களவை, யேர்மனி இளையோர் அமைப்பு மற்றும் பெண்கள் அமைப்பு ஆகியன யேர்மனிய மனிதநேய அமைப்புக்களுடனும் கட்சிகளுடனும் இணைந்து தொடர் ஆர்ப்பாட்டங்களை யேர்மனி முழுவதும் முன்னெடுத்து வந்தனர்.

யேர்மனியிலிருந்து 24 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர் உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு!! 1

நேற்று 30.3.2021 செவ்வாய்க்கிழமை கைது செய்து வைக்கப்பட்டிருந்தவர்களை டுசில்டோர்ப் விமானநிலையத்திலிருந்து நாடுகடத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்தபோது விமானநிலையத்தில் தமிழ்மக்களையும், யேர்மனி மனிதஉரிமை அமைப்புக்களையும், கட்சிகளையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோது நான்கு பேரை விடுதலை செய்தனர்.

யேர்மனியிலிருந்து 24 ஈழத்தமிழர்கள் நாடுகடத்தப்பட்டனர் உத்தியோகபூர்வ தகவல் வெளியீடு!! 2

 இருந்தபோதும் 21.00 மணியளவில் Büren நகரத்தில் உள்ள இடைத்தங்கள் முகாமிலிருந்து 24 ஈழத்தமிழர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளதாக உறுதி ப்படுத்தபட்ட செய்திகள் மூலம் தெரியவருகிறது. ஏனைய இடங்களில் இருந்து எத்தனை ஈழத்தமிழர்கள் நாடுகடத்தபட்டனர் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும் நேற்றய தினம் நாடுகடத்தப்பட்ட வேளையில் கண்கானிப்பிற்க்கு பொறுப்பாக இருந்தவர்களின் தகவலின்படி 31 ஈழத்தமிழர் கள் திருப்பி அனுப்ப பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள