வடக்கில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை – 129 பேர் கைது ; 38 பேருக்கு பிணை!

You are currently viewing வடக்கில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை – 129 பேர் கைது ; 38 பேருக்கு பிணை!

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52  பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது  வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் சிறீலங்கா  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம்  சிறீலங்கா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட பகுதிகளில் 14  கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 44 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 11 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை சிறீலங்கா  பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 05 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்  சிறீலங்கா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 04 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 06 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா  சிறீலங்கா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 04 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு  சிறீலங்கா   பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 07 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி   சிறீலங்கா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 13 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 37 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments