வாக்னர் கூலிப்படை தலைவன் கொல்லப்பட்டிருக்கலாம்? – எழுந்துள்ள சந்தேகம்!

You are currently viewing வாக்னர் கூலிப்படை தலைவன் கொல்லப்பட்டிருக்கலாம்? – எழுந்துள்ள சந்தேகம்!

தோல்வியில் முடியும் என தெரிந்தும் ஆயுத கிளர்ச்சியை முன்னெடுத்த வாக்னர் கூலிப்படை தலைவன் எவ்ஜெனி பிரிகோஜின் கொல்லப்பட்டிருக்கலாம் என முன்னாள் அமெரிக்க இராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆயுதக் கிளர்ச்சிக்கு பின்னர் ஐந்து நாட்களில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் வாக்னர் கூலிப்படை தலைவன் நேரடி சந்திப்பை முன்னெடுத்ததாக ரஷ்யா கூறி வரும் நிலையில், அது வெறும் நாடகம் என கூறியுள்ளார் ஓய்வு பெற்ற அமெரிக்க தளபதி ராபர்ட் ஆப்ராம்ஸ்.

முன்பு கொரியாவின் அமெரிக்கப் படைகளின் தளபதியாக பணியாற்றியுள்ள ஆப்ராம்ஸ் தெரிவிக்கையில், பிரிகோஜினை மீண்டும் நாம் பொதுவெளியில் பகிரங்கமாகப் பார்ப்போமா என்பது சந்தேகம் தான் என்றார்.

பிரிகோஜின் ஏதேனும் மறைவிடத்திற்கு அனுப்பியிருக்கலாம், அல்லது சிறைக்கு அனுப்பியிருக்கலாம், அல்லது அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அவரை இனி நாம் பார்ப்பது சந்தேகம் என்றே கருதுகிறேன் என்றார் ஆப்ராம்ஸ்.

அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதே சந்தேகம் என்ற நிலையில், அப்படி உயிருடன் இருந்தால், கண்டிப்பாக ஏதேனும் ரகசிய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கவே வாய்ப்பு என்றார்.

ஆயுத கிளர்ச்சிக்கு பின்னர், ஐந்து நாட்களில் புடினுடன் பிரிகோஜின் சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் அது தொடர்பான காணொளி காட்சிகள் மட்டுமல்ல, புகைப்படம் கூட வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார் ஆப்ராம்ஸ்.

ஆயுதக் கிளர்ச்சிக்கு பின்னர் பெலாரஸ் நாட்டிற்கு சென்றதாக கூறப்படும் நிலையில், அதுவும் உறுதியான தகவல் இல்லை என சமீப நாட்களில் அம்பலாமனதாக அவர் கூறியுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments