விளையாட்டு விபரீதமானது உயிர் ஒன்று பலியானது!

You are currently viewing விளையாட்டு விபரீதமானது  உயிர் ஒன்று பலியானது!

இளவாலையில் நேற்று தொலைபேசியில் தொடர்சியாக இணையவழி விளையாட்டில்(வீடியோ கேம்) விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின் அண்மைக்கால நடவடிக்கையாக இருந்துள்ளது. அதில் மூழ்கிப் போன அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று உறவினர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

இளைஞனின் சடலத்தில் காதுகளில் மாட்டிய தலையணி(ஹெட்செட்) மற்றும் சட்டைப்பையில் அவரது தொலைபேசி என்பன காணப்பட்டுள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உடக்கூற்றுப் பரிசோதனை மற்றும் இறப்பு விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments