வெடுக்குநாறி மலை அட்டூழியங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

You are currently viewing வெடுக்குநாறி மலை அட்டூழியங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

சிவராத்திரி தினத்தன்று, வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக வவுனியா பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணையில் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள், மற்றும் ஆலயத்தின் செயலாளர், பொலிசாரால் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் செயலாளர்,

நாங்கள் தொல்லியல் இடங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினர் சில ஆவணங்களை வழங்கியிருந்தனர்.குறிப்பாக மலை உச்சியில் தீ மூட்டியதாக ஒரு விடயத்தை முன்வைத்திருந்தனர். அதனாலேயே கைதுகள் இடம்பெற்றதாக தெரிவித்தனர்.

நாங்கள் அதனை எரித்தமைக்கான எந்த ஆதாரங்களும் சமர்ப்பிக்கபடவில்லை. அத்துடன் அவர்களது கருத்துக்களில் முரண்பாடுகள் காணப்பட்டது.

அத்துடன் தீமூட்டியதாக இவர்கள் காட்டிய புகைப்படமானது முதல்நாள் இரவில் அங்கு காவல் கடமைகளில் இருந்த நெடுங்கேணி பொலிசார் கொழுத்தியதற்கான சான்றுகளை நாம் வெளிப்படுத்தியிருந்தோம். அந்த புகைப்படத்தினையே அவர்கள் இங்கு சமர்பித்திருந்தார்கள். இது முற்றிலும் பொய்யானது. இதனை நாம் சுட்டிக்காட்டினோம். என்றார்.

இதேவேளை குறித்த விசாரணை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன், வரும் நாட்களில் நெடுங்கேணி பொலிசார் மற்றும் வனவளத்திணைக்களத்தினரும் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments