LO மற்றும் NHO: வேலையில்லாதவர்கள் கல்வி கற்க பரிந்துரை!

  • Post author:
You are currently viewing LO மற்றும் NHO: வேலையில்லாதவர்கள் கல்வி கற்க பரிந்துரை!

LO தலைவர் Hans-Christian Gabrielsen மற்றும் NHO தலைவர் Ole Erik Almlid இருவரும் இணைந்து, வேலையின்மை நலனுக்கான விதிகளை மாற்ற வேண்டும் என்றும், இதனால் வேலையற்றோர் தங்கள் திறன்களை உயர்த்திக் கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளனர்.

பலர் நீண்ட காலமாக வேலையில்லாமல் இருப்பார்கள் அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். திறனை மேம்படுத்த இந்தக் காலகட்டத்தை பயன்படுத்துவது மிக முக்கியம் என்று LO தலைவர் Hans-Christian Gabrielsen மற்றும் NHO தலைவர் Ole Erik Almlid கூறியுள்ளனர்.

அரசு, திங்களன்று ஒரு கூட்டத்திற்கு கட்சிகளை வரவழைத்து, இப்போது வேலையின்மை நலன் பெறுபவர்களுக்கான திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி ஆராயவுள்ளது .

இன்று, வேலை தேடுபவர்கள் தங்கள் திறனை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் கடுமையான விதிமுறைகள் உள்ளன. வேலையின்மை நலன்களை வைத்திருக்க விரும்பினால், முதுகலைப் படிப்புகள் அல்லது நடைமுறைப் படிப்புகள் மூலம் தொடந்து வைத்திருக்கலாம்.
அவர்கள் மாணவர்களாக வகைப்படுத்தப்படுவார்களானால், வேலையின்மை நலனை இழப்பார்கள், மாணவர் கடன்களை மட்டுமே பெறுவார்கள்.

NHO மற்றும் LO, இப்போதுள்ள கொரோனா நெருக்கடிக்கு புதிய நடவடிக்கைகள் தேவை என்று நம்புவதாக கூறியுள்ளனர்! .

மேலதிக தகவல்: Aftenposten

பகிர்ந்துகொள்ள