இலங்கை அரசின் போலி முகத்திரையை கிழித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

You are currently viewing இலங்கை அரசின் போலி முகத்திரையை கிழித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர்!

ஐ நா மனித உரிமைப் பேரவையின் 55 கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பேரவையின் ஆணையாளர் ஆற்றிய வாய் மூல அறிக்கை இலங்கை அரசின் போலி முகத்திரையை கிழித்துள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அதாவது ஆணையாளரின் உரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சரின் உரை காணொளி வடிவில் திரையில் காண்பிக்கப்பட்டது. அவை அத்தனையும் பொய்யுரை என்பதை ஆணையாளரின் உரை வெளிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசிடம் நீதி இல்லை என்பதை புதிய சட்டங்கள் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு , காணாமல் ஆக்கப்பட்டோரின உறவினர்களுக்கு கொடுக்கப்படும் அச்சுறுத்தல் , நிலஅகரிப்பு , போலி நல்லிணக்கம் என்பவற்றை உதாரணப்படுத்தி இலங்கை அரசின் நீதிப் பொறிமுறையின் தோல்வியை உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆணைராளரின் வாய் மூல உரைக்கு நன்றி கூறும் நேரம் தொடர்ந்தும் இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேரவைக்கு உட்பட்ட தீர்மானங்களுக்கு நீதி வழங்காது என்ற உண்மை உறுதியாகி விட்டது அடுத்த தீர்மானம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துவதாக அமைய வேண்டும் அதுவே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை. என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments