தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில்,தமிழின அழிப்பினை மேற்கொண்ட சிங்களப் பேரினவாத அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறையூடான நீதியினையும் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதியான தீர்வு என்பதனையும் வலியுறுத்தி 04.03.2024    இன்று பி.ப 2:15 மணியளவில் ,சுவிஸ் ஜெனிவாவில் அமைந்துள்ள   ஐக்கிய நாடுகள் சபை முன்றலில்    (ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில்) உணர்வெழுச்சியுடன் கவனயீர்ப்பு போராட்டம்  ஆரம்பமாகி நடைபெற்றது.

இப்போராட்டத்தில் ஐரோப்பிய வாழ்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து  ஒருமித்த  குரலோடு தங்களின் கோரிக்கையை  சர்வதேசத்திடம்  எழுப்பினார்கள்.இந்த பேரணியில்

சிங்கள பேரினவாத அரசின் சனாதிபதி  இனப்படுகொலையாளி  என்றும் ,we want tamil eelam  ,  எங்கள் தேசியத்தலைவர் பிரபாகரன்  என்றும்  ஐ நா முன்றலில் விண்ணதிர  சர்வதேசத்தின் காதுகளுக்கு கேட்க்கும் படி  தமிழர்கள் முழங்கினார்கள்

தமிழர்களுக்கெதிரான  தாங்கொணா அடக்குமுறைகள் ,இன்னல்களினால் பிறப்பெடுத்த தமிழீழப் விடுதலைப் போராட்டம் பல்லாயிரம் மாவீரர்களினதும் தமிழ் மக்களினதும் தியாகத்தினால் உயர்நிலைக்குச் சென்று, 2009 இல் நடந்த திட்டமிட்ட இனவழிப்புப் போருக்குப் பின்னும் அறவழிப்போராட்டமாக தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி விடுதலை நோக்கி வீறுகொண்டு அறவழியில் இப்போராட்டம்  நடைபெறுகின்றது

தமிழர்கள் இவ்வாறான தொடர்ச்சியான அறவழிப்போராட்டங்களை முன்னெடுப்பதனூடாக,எமது விடுதலையை  தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில்,  எமது  தமிழீழ மண்ணை மீட்டு ,சுதந்திரமாக வாழ  முடியும்.இச்சூழமைவில் காலத்தின் தேவை அறிந்து நாம் செயலாற்ற வேண்டும்.

தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! 1
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments