கிளிநொச்சியில் உடலை மாற்றிய மருத்துவமனை!

You are currently viewing கிளிநொச்சியில் உடலை மாற்றிய மருத்துவமனை!

கிளிநொச்சியைச் சேர்ந்த கோவிந்தன் மோகனதாஸ் கொரோனா என்ற சந்தேகத்தில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் இயற்கையாக மரணமடையவில்லை எனவும் வைத்தியசாலை தான் கொண்று விட்டது என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இது தொடர்பில் உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் தனது முகநூலில் ப்திவிட்டுள்ளதாவது,
எனது சித்தப்பா கோவிந்தன் மோகனதாஸ் இறைபாதமடைந்தார். கிளிநொச்சி வைத்தியசாலையில் இவர் நெஞ்சுநோ காரணமாக அனுமதிக்கப்பட்டார். வைத்திய அதிகாரிகள் இவரை கொரோனா தொற்று என்ற சந்தேகத்தில் தனியறையில் பூட்டி வைத்துள்ளனர். நேரடியான வைத்திய கண்காணிப்பு இன்மையால் பூட்டிய அறைக்குள்ளேயே இறந்து கிடந்துள்ளார்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் நான் சித்தப்பாவை இழந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
அத்துடன் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுவரை கொரோனா இருக்கலாம் என்ற அச்சத்தில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் தனிமைப்படுத்தல் விடுதியில் விடப்பட்டவர் காலையில் சடலமாக காணப்பட்டார்.


இதேவேளை மோகனதாஸ் என்பவரின் சடலத்திற்கு பதிலாக செல்வராசா என்பவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையினால் வழங்கப்பட்டதோடு அவரின் 15 வயதான மகள் சடலம் மாறி வந்ததை அவதானித்ததை தொடர்ந்து, வைத்தியசாலை நிர்வாகம் சடலத்தை மாற்றி கொடுத்திருந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
மேலும் மோகனதாஸ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி இல்லையென முடிவும் வெளியாகி உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


இதனையடுத்து இன்று மதியம் 2 மணியளவிலே அவரது சடலம் அவர்களின் முறைப்படியே அடக்கம் செய்யப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள