சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 35 ஆவது ஆண்டு நினைவு!!

You are currently viewing சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தேவராசாவின் 35 ஆவது ஆண்டு நினைவு!!

இலங்கையில் முதலாவது படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று (25.12.2020) இடம்பெற்றது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியராளரின் சகோதரரான கவிஞர் ஓய்பெற்ற அதிபர் அக்கரைப் பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா, மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நினைவுரைகளும் இடம்பெற்றன.

இதன்போது கருத்துத் தெரிவித்த படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராஜனின் சகோதரர் ஓய்வுபெற்ற அதிபர் கணபதிப்பிள்ளை பாக்கியராசா கருத்துத் தெரிவிக்கையில்,

என்னைப் பெறுத்தவரையில் சில ஊடகங்கள் உண்மையை மறைப்பது மிகவும் மனவேதனையாகவுள்ளது. இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் வரிசையில் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் பெயர் இடம்பெறவில்லை. மாறாக இலங்கையில் முதன்முதலில் படுகொலை செய்யப்பட்டவர்தான் எனது சகோதரர் கணபதிப்பிள்ளை தேவராசா ஆவார். இதனை நினைத்து வேதனையாகவுள்ளது. ஊடகவியலாளர் என்ற காரணத்தினால்தான் எனது சககோதரன் கடந்த 1985.12.25 அன்று அம்பாறை கொண்டவட்டுவானில் வைத்து இராணுவத்தினாரால் படுகொலை செய்யப்பட்டார். “குட்டியாடு தப்பிச் சென்றால் அது குள்ளநரிக்குச் சொந்தம்” அதுபோன்றுதான் ஊடகவியலாளர்களும் மாட்டிக்கிட்டால் அராஜகம் புரிபவர்கள், அட்டூளியக்காரர்களுக்குச் சொந்தம். 1985 ஆம் ஆண்டும் இதுதான் நடைபெற்றதும் இதுதான்.

பகிர்ந்துகொள்ள