சிறீலங்கா இனவழிப்பு இராணுவத்திற்கு இரையாககும் தமிழ் பெண்கள்!

You are currently viewing சிறீலங்கா இனவழிப்பு இராணுவத்திற்கு இரையாககும் தமிழ் பெண்கள்!

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை இரண்டு பிள்ளைகளின் தாயார் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா சிறீலங்கா காவற்துறையினரினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குருநாகல் வரக்காப்பொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச் சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும் வன்னி இராணுவ தலைமையக அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்ப பெண் அவரை தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா சிறீலங்கா காவற்துறையினால் காப்பாற்றப்பட்டு காவற்துறை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்

குறித்த பெண்ணிக்கு சிறீலங்கா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments