தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி 15பேர் படுகாயம்!

You are currently viewing தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி 15பேர் படுகாயம்!

தஞ்சாவூர் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து நிகழ்ந்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் வழக்கமாக நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை வரை அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டு வரப்பட்ட நிலையில், கோவில் அருகே தேர் வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது.

இதனால் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர், தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, தேர் ஊரை சுற்றிவிட்டு கடைசியாக ஒரு வீட்டில் சாமிக்கு பூஜை, தேங்காய் உடைத்துவிட்டு கோவிலுக்கு திரும்பும்போது சாலைக்கு மேல் உயர்மின்சார கம்பி அருகில் இருந்துள்ளது.

இந்த ஆண்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளது. புதிய சாலை 2 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது உயர்மின்சார கம்பி சாலைக்கு மேல் வரும் வகையில் இருந்துள்ளது.

அப்போது, தேரை இழுத்தவர்கள் அதனை திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டதால், மீண்டும் தேரை பின்னால் இழுத்து திருப்ப முடியவில்லை.

பின்னர் சாலையின் ஓரம் சென்று தேரை வளைத்து திருப்ப முயற்சித்துள்ளனர். அப்போது தேரின் உச்சியில் மடக்கி தூக்கும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த கும்பம், சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது.

சாலையில் தேரை திருப்பும்போது தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தவில்லை. இதை தேரை இழுத்த நபர்களும், சிறுவர்களும், ஜெனரெட்டரை இயக்கி வந்த நபரும் கவனிக்கவில்லை.

தேரின் உயரத்தை குறைக்கும் மடக்கி தூக்கும் அமைப்பை பயன்படுத்தாததால் தேரை திருப்பும்போது சாலையின் மேல் சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பி தேரின் உச்சியை உரசியுள்ளது.

இதன் காரணமாக உயர் மின் அழுத்த கம்பியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம், தேர் மற்றும் ஜெனரேட்டை கொண்டு வந்த வாகனம் மீது பாய்ந்தது. இதனால் தேரில் இருந்தவர்கள், தேரை பிடித்திருந்தவர்கள் உட்பட பலர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதற்கு முன்பெல்லாம் சாலை சிறியதாகவே இருக்கும். அப்போது, சாலைக்கு உள்ளேயே தேரை திருப்பி விடுவார்கள்.

ஆனால், தற்போது சாலை அகலப்படுத்தப்பட்டதாலும் , அதன் உயரம் அதிகரித்து இருந்ததாலும் தேரை சற்று முன்னே சென்று வளைத்தி திருப்பியதாலும், சாலைக்கு மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பி மீது தேரின் உச்சி உரசி தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

தேரின் பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வைத்திருந்த வாகனம் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது என தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம்:

மோகன் (22)

பிரதாப் (36)

ராகவன் (24)

அன்பழகன் (60)

நாகராஜன் (60)

செல்வம் (56)

சாமிநாதன் (56)

சந்தோஷ் (15)

ராஜ்குமார் (14)

பரணிதரன் (13)

கோவிந்தராஜ்

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments