தமிழ் இனத்தின் மரபுவழித் தொடர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்!

You are currently viewing தமிழ் இனத்தின் மரபுவழித் தொடர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்!

சோழப்பேரரசு வீழ்ச்சியடைந்த தொள்ளாயிரம் ஆண்டுகளின் பின்னர், மீண்டெழுந்த தமிழினம்,மூன்றாம் இராசேந்திர சோழனின் பின்னர், தமிழ் இனத்தின் மரபுவழித் தொடர்ச்சி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகும். தமிழினத்தின் மீண்டெழுந்த வீரத்தின் சிந்தனையாளர், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களே
தமிழினத்தின் வரலாற்றில் கடல் கடந்தும் பேரரசை நிறுவியது சோழப் பேரரசு காலகட்டத்தில்தான்.

அதேபோல 21ம் நூற்றாண்டில் ஒரு non-state military power ஆக, அதி உச்ச போரியல் சாதனைகளை செய்தது தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மட்டுமே.

தமிழினத்திற்கென ஒரு இறையாண்மை அரசை உருவாக்க முயன்றதும் இந்த ஆயிரம் வருட வரலாற்றில் விடுதலை புலிகள் மட்டுமே.

இன்னும் சுருக்கமாகச் சொன்னால் ‘உலக ஒழுங்கிற்கு’ தமிழர் என்ற இனம் இருப்பதாக தெரிந்ததே விடுதலைபுலிகளின் போரியல் சாதனைகளால்தான். அதற்கு முன்பு தமிழர் என்ற இனம் ‘இந்தியர்கள்’, ‘இலங்கையர்கள்’ என அழைக்கப்பட்டு வந்தது.

ஆக தமிழர் இன வரலாற்றில் இரு பெரும் முக்கியமான வரலாற்று புள்ளிகள் சோழ பேரரசு, மற்றையது தமிழீழ விடுதலைபுலிகள்.

ஆனால் சோழப் பேரரசையும் , விடுதலை புலிகளையும் தொடர்புபடுத்தக்கூடிய சில வரலாற்று நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.

அந்த சில வரலாற்று நிகழ்வுகள்,

தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையில், அவர் கொடுத்த முதலாவது நேர்காணல் , இந்திய ஊடகவியலாளர் அனிதா பிரதாப்பிற்கு ஆகும் . இது நடந்தது 1984 ம் ஆண்டு மார்ச் மாதம்.

அதில் அனிதா பிரதாப் பின்வரும் கேள்வியை கேட்கிறார்.

அனிதா பிரதாப்: உங்களை ‘புலிகள்’ என்று ஏன் அழைத்துக்கொள்கிறீர்கள்?

தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான் எமது இயக்கத்திற்கு ‘ தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்று பெயரிட்டேன். புலிச் சின்னமானது தமிழ்தேசியத்தின் புத்தெழுச்சியை உருவகப்படுத்துகிறது. அத்துடன் கெரில்லா யுத்த முறையையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது.

மேலே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன், ‘தமிழர்களின் அரசியல் வரலாற்றில் புலிச் சின்னமானது ஆழ்ந்து வேரோடி இருப்பதால்தான்’ என்று குறிப்பிடுவது சோழ பேரரசின் அதி உன்னதமான காலகட்டத்தை பற்றியே. அந்த காலகட்டம்தான் தமிழர் இன வரலாற்றில் அதி உச்சங்களை தொட்ட காலம். இரண்டாவது நிகழ்வு – தேசியத் தலைவர் பிரபாகரன் தமது கடற்புலி பிரிவிற்கு ஆரம்பத்தில் வைத்திருந்தபெயர் ‘கடல் புறா’.

அது என்ன ‘கடல் புறா’?

தமிழின் வரலாற்று புனைவு எழுத்தாளர்களில் பெரும் புகழ்பெற்றவர் எழுத்தாளர் சாண்டில்யன். அவரின் மிகப்புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றுதான் ‘கடல் புறா’.

இந்த கடல் புறா வரலாற்று நாவல் சோழ சாம்ராஜ்யத்தின் பெரும் தளபதி கருணாகர பல்லவனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல்.

போரியல் ஆய்வாளர்கள் சோழக் கடற்படையே அன்றைய உலகின் மிகப்பலமான கடற்படை என்பதை உறுதி செய்கிறார்கள்.

அதனை உள்வாங்கிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் , தமது கடற்புலிப் படைகளுக்கு ‘கடல் புறா’ என 80 களில் பெயர்வைத்தார்.

சோழர்களின் கடற்படையைப் போலவே, கடற்புலிகளும் வீரத்தில், அதி் உச்சத்தை தொட்டார்கள்.

உலகில் இருந்த non-state ஆயுத பல இயக்கங்களிலேயே, ஒரு நாட்டின் conventional navy இற்கு சம தரப்பாக இருந்து ஒரு பெரும் கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது விடுதலை புலிகள் மட்டுமே.

சோழர்களின் பக்கவாட்டில் பாயும் புலிக்கு பதிலாக முகத்தை மட்டும் காட்டி பாயும் புலியை தமது இயக்கத்தின் இலச்சினையாக வைத்துக்கொண்டதற்கு தேசியத் தலைவர் பிரபாகரன் சொன்ன காரணம் ஆழமானது.

தனது உடலின் பக்கத்தை காட்டிக்கொண்டு பக்கவாட்டில் பாயும் புலி, எதிரிகள் தாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்கிறது. அத்தகைய சந்தர்ப்பத்தை எதிரிகளுக்கு ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது என்பதால் முகத்தை மட்டுமே காட்டிக்கொண்டு பாயும் புலியை இலச்சினையாக தேர்ந்தெடுத்தேன் என தலைவர் பிரபாகரன் கூறுகிறார். ஆகமொத்தத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடிப்படைகளை அங்குலம் அங்குலமாக செதுக்கிய சிந்தனைச் சிற்பி எமது தேசியத் தலைவர் அவர்கள் . தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இலக்கை நோக்கி நாங்கள் உறுதியுடன் பயணிக்கப் பயணிக்க எமக்குத்தேவையான வரலாற்று வழிகாட்டல்கள் ஆங்காங்கே புதைத்திருக்கும். நிச்சயமாக தேசியத்தலைவரின் சிந்தனையை ஏற்று அவர் வழித்தடத்தில் இலக்கை நோக்கி நகர்பவர்களிற்கு மேதகு பிரபாகரன் சிந்தனை வழிகாட்டும்…..

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments