மரணதண்டனை விதிக்கப்பட்ட இரு படையினரும் விடுதலை!

You are currently viewing மரணதண்டனை விதிக்கப்பட்ட இரு படையினரும் விடுதலை!

1996 ஆம் ஆண்டு ரஜினி வேலாயுதபிள்ளை என்ற யுவதி கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இராணுவ சிப்பாய் ஹெவாபீடிகே சரத்சந்திர மற்றும் கோப்ரல் கமகே கித்சிறி ஆகிய இரு பிரதிவாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

மூன்றாவது பிரதிவாதியான கோப்ரல் காமினி சமன் லியனகேவை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரும்பிராயைச் சேர்ந்த 23 வயதான ரஜினி வேலாயுதபிள்ளை 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதி கோண்டாவில் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சோதனைச் சாவடியில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட ரஜினியை அருகில் உள்ள வீட்டுக்குள் இழுத்துச் சென்று இராணுவத்தினர் கூட்டாக வல்லுறவுக்குட்படுத்திய பின்னர் கொலை செய்தனர். பின்னர் சடலம், கழிப்பறைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments