நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் !

You are currently viewing நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் !

இலங்கையில் நீதித்துறை மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நெருக்கீடுகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி-சரவணராஜா அவர்களுக்கு நீதியும், பாதுகாப்பும், கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், இன்று ( 02.10.2023) திங்கட்கிழமை கிளிநொச்சியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சியினரின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்-சிறீதரன் தலைமையில் இன்று ( 02.10.2023) திங்கட்கிழமை  முற்பகல் கிளிநொச்சி நகரப் பகுதியின் ஏ-09, பிரதான வீதியருகே நடைபெற்ற இந்தக் கண்டனப் போராட்டத்தில் பொதுமக்கள், சட்டத்தரணிகள்,வர்த்தகர்கள், தமிழ்த் தேசிய செயற் பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இப் போராட்டத்தின் முடிவில் ஐக்கிய நாடுகளின் சபையின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்ரெஸ் அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக நாளைய நாள் (03.10.2023)  செவ்வாய்க்கிழமை கொழும்பில் வைத்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்ச் அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்-சிறீதரன் அவர்களால் கையளிக்கப் படவுள்ள இலங்கை நீதித்துறை மீதான அரச நெருக்கீடுகளுக்கு பரிகாரம் காண்பதற்கான பரிந்துரைப்பு மனு வாசிக்கப்பட்டது.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 1

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 2

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 3

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 4

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 5

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 6

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 7

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப் படுத்துமாறு கோரி கிளிநொச்சியில் போராட்டம் ! 8

 

 

 

 

 

 

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments