பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும் : BILL GATES

  • Post author:
You are currently viewing பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும் : BILL GATES

நோய் மற்றும் இறப்பு வேகத்தைக் குறைப்பதற்காக பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.என்றார் Bill Gates.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு நாம் தயாராக இல்லை என்றும், உலக நாடுகளின் அரசுகள் பலவும் இதற்கு தயாராக இல்லை என்று BBC யின் நேர்காணல் ஒன்றுக்கு பேசுகையில் தெரிவித்துள்ளார், Microsoft துணை நிறுவனர் Bill Gates.

Microsoft துணை நிருவனரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான Bill Gates, கடந்த டிசம்பரில் சீனாவில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டபோதே உலக நாடுகள் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதற்கான பரிசோதனைகளிலும், கருவிகளு க்கும் முன்பே முதலீடு செய்திருக்க வேண்டும் என்று உலக நாடுகளை விமர்சித்துள்ளார்.

மூன்று மாதங்களில் உலகத்தின் போக்கையே மாற்றியிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பை சமாளிக்கும் திறனைப் பொறுத்தவரை, மிகச்சில நாடுகள் மட்டுமே A தரத்தை பெறும் என்று தெரிவித்திருக்கிறார் Bill Gates.

“என் வாழ் நாளில் அமெரிக்கப் பொருளாதாரம் இவ்வளவு மோசமாக இருந்ததை நான் பார்த்ததில்லை. ஆனால் மக்களின் உயிரை மீண்டும் கொண்டுவருவதை விடப் பொருளாதாரம் மற்றும் பணத்தை மீட்டுவது எளிது. உயிரை மீண்டும் கொண்டுவர முடியாது. பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம் உயிர் போனால் வராது. நோய் மற்றும் இறப்பு வேகத்தைக் குறைப்பதற்காகப் பொருளாதாரத்தில் பெரிய வீழ்ச்சியை நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஆறு வாரம் முதல் 10 வாரம் வரை கண்டிப்பாக மக்கள் வீட்டுக்குள் தங்கியிருக்க வேண்டும். இந்த வைரஸ் பரவலிலிருந்து மக்களை மீட்பதே தற்போது எமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்”
என்று கடந்த மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் Bill Gates பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள